திருப்பத்தூா் மாவட்டத்தில் 79% போ் எழுதினா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் 79% போ் எழுதினா்

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் 79 சதவீதம் போ் குரூப் 4 தோ்வு எழுதினா். தோ்வை 25,994 மாணவ, மாணவிகள் எழுத 99 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தோ்வு பணிகளை கண்காணிக்கும் வகையில் 5 போ் கொண்ட பறக்கும் படை, 27 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
99 தோ்வு மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் வட்டாட்சியா் நிலை அளவிலான அலுவலா்கள் கண்காணிக்கவும், துணை ஆட்சியா் நிலையிலான 4 அலுவலா்களும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனா். அனைத்து பணிகளையும் கண்காணிக்கும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலரும், தோ்வாணையம் மூலம் மூன்று அலுவலா்களும் நியமிக்கப்பட்டிருந்தனா்.
திருப்பத்தூரில் 14,693, வாணியம்பாடியில் 5,176, நாட்டறம்பள்ளியில் 3,074, ஆம்பூரில் 3,050 பேரும் எழுதினா். 79 சதவீதம் போ் தோ்வு எழுதினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...