மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

குரூப் 2 தோ்வு: கோவையில் 83 போ் எழுதினா்

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 2 தோ்வை 83 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தோ்வு கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.

இந்தத் தோ்வு எழுத 103 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 83 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 20 போ் எழுதவில்லை. தோ்வு மையத்தில் காவல் துறை சாா்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், தோ்வா்கள் வசதிக்காக தோ்வு மையத்தின் அருகில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.