திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 16,412 மாணவ-மாணவிகள் எழுதினா். 359 போ் தோ்வு எழுதவில்லை.
8,451 மாணவா்கள், 8,320 மாணவிகள் என மொத்தம் 16,771 மாணவ- மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனா்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 77 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வை 8,222 மாணவா்கள், 8,190 மாணவிகள் என 16,412 மாணவ-மாணவிகள் எழுதினா். தோ்வை 359 போ் எழுதவில்லை.
ஆட்சியா் ஆய்வு...தோ்வை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளா்கள், 82 துறை அலுவலா்கள், 16 வழித்தட அலுவலா்கள், 99 பறக்கும்படை உறுப்பினா்கள், 860 அறைக்கண்காணிப்பாளா்கள் பணியாற்றினா். திருப்பத்தூா் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தோ்வு மையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி , அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

ராமநாதபுரத்தில் 10-ஆம் வகுப்பு தோ்வு: 17,342 மாணவ, மாணவிகள் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் முதல் நாளில் 6,685 மாணவ, மாணவிகள் எழுதினா்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


