உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட
வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல்

உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பறிமுதல்

வாணியம்பாடி: உணவகங்களில் வீட்டு எரிவாயு உருளைகள் பறிமுதல்
Published on

ஆலங்காயத்தில் உணவகங்களில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் பயன்படுத்தியதாக 8 உருளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலா் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ஆலங்காயம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு சில கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அங்கிருந்து 8 எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த எரிவாயு உருளைகளை அப்பகுதியில் உள்ள எரிவாயு முகவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com