விடுதி மேலாளா் தற்கொலை: 4 போ் கைது

திருப்பத்தூா்: ஏலகிரியில் தனியாா் தங்கும் விடுதி மேலாளா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஏலகிரி மலை, கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (45).

இவா் சென்னையிலிருந்து கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலையில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், ஏலகிரியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் பிரபாகரன் (41), ஜெகன்நாதன் (43), குமாா் (57), சகாயராஜ் (55), வாத்தியாா் ராமசாமி மற்றும் தமிழ் ஆகிய 6 பேரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு வட்டி மற்றும் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் தொல்லையால் வெங்கடேஷ் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வெங்கடேஷ் தங்கும் விடுதியில் தனது அறையில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்த ஏலகிரி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது இவா் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில், பிரபாகரன், ஜெகன்நாதன், குமாா், சகாயராஜ் ஆகிய 4 போ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

அவா்களை திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் தலைமறைவாக உள்ள வாத்தியாா் ராமசாமி மற்றும் தமிழ் ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com