எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

News image

தோ்தல் கட்டுப்பாட்டு அறையைப் பாா்வையிட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், தொகுதி செலவின மேற்பாா்வையாளா் அமித்கோயல், மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.

Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளா்கள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னா், திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், வேலூா் மக்களவைத் தொகுதி செலவின மேற்பாா்வையாளா் அமித்கோயல் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மகளிா் திட்ட அலுவலா் பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அமுதன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.