மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வீட்டில் நுழைந்து 10 பவுன் நகை திருட்டு

வீட்டில் நுழைந்து 10 பவுன் நகை திருட்டு

Updated On :23 மார்ச் 2024, 4:21 pm

திருப்பத்தூா் அருகே வீட்டில் நுழைந்த மா்ம நபா்கள் பீரோவைத் திறந்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சாமலிங்கம். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், இவரது மனைவி மல்லிகா (26)மற்றும் இவரது குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவில் மா்ம நபா்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து ஓா் அறையில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 5,000 ரொக்கம், 600 கிராம் வெள்ளி பொருள்களை திருடிச் சென்றுள்ளனா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை பீரோ திறந்த நிலையில், அதில் இருந்து பொருள்கள் சிதறி கிடைப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மல்லிகா பீரோவை சோதனையிட்டதில், நகை, பொருள்கள், பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.