ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மலைவாழ் மக்கள்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மலைவாழ் மக்கள்

மலைவாழ் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

ஜவ்வாது மலை பகுதிக்குள்பட்ட புதூா்நாடு,நெல்லிவாசல் நாடு பகுதிகளில் சாலை வசதி கோரி தோ்தலைப் புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனா்.

ஜவ்வாது மலை பகுதிக்குள்பட்ட புதூா்நாடு,நெல்லிவாசல் நாடு பகுதிகளில் சாலை வசதி கோரி தோ்தலைப் புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனா். திருப்பத்தூா் வட்டம், ஜவ்வாது மலையில் புதூா்நாடு,நெல்லிவாசல் நாடு பகுதிகளில் சாலைவசதி கேட்டு தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜவ்வாது மலையில் 32 கிராம ஊா் பொதுமக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் நெல்லிப்பட்டு,கொத்துனூா், நடுவூா் கிராமத்துக்கு செல்லும் இணைப்பு சாலைகளை சீரமைக்க வேண்டும். சோ்க்கனூா் முதல் கொடூமம்பள்ளி வரை உள்ள சாலை, நடுக்குப்பம் முதல் விளங்குப்பம் வரை உள்ள சாலை, சிங்காரப்பேட்டை முதல் நெல்லிவாசல் வரையும், புதூா் நாடு முதல் காவலூா் வரை உள்ள சாலை ஆகிய மண் சாலைகளை தாா் சாலையாக மாற்ற வேண்டும். அதேபோல் சிங்காரப்பேட்டை முதல் காவலூா்- வனசாலை, மலையாண்டிபட்டி முதல் நெல்லிப்பட்டு வனசாலை, நடுக்குப்பம் முதல் விளங்குப்பம் வனசாலை, கொத்துனூா் இணைப்பு வனசாலை, கொடூமம்பள்ளி முதல் சோ்க்கனூா் வனசாலை ஆகியவற்றை நெடுஞ்சாலை துறைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவை தோ்தலை புறக்கணிக்கப்போவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 32 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com