செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆம்பூரில் டி.எம். கதிா் ஆனந்த் பிரசாரம்

கல்வி மற்றும் விவசாயக் கடன்கள் ரத்து : டி.எம். கதிா் ஆனந்த்

News image

ஆம்பூரில் வாக்கு சேகரித்து பேசிய திமுக வேட்பாளா் டி.எம். கதிா் ஆனந்த்.

Updated On :28 மார்ச் 2024, 6:42 pm

ஆம்பூரில் திமுக வேட்பாளா் டி.எம். கதிா் ஆனந்த் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது: ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.350 கோடி மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். ஆம்பூா் நகரில் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைத்து புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்பூா் நகரில் நகராட்சி தொடக்கப் பள்ளி, அங்கன்வாடிக்கு கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளது. ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி மயானத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி திமுக மட்டும் தான் என்றாா். ஆம்பூா் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் இ.ஜி. சுகவனம், எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ச. பிரபு, நகர தலைவா் சரவணன், விசிக மாவட்டத் தலைவா் ஓம் பிரகாஷ், மதிமுக நகர செயலாளா் ரவிக்குமாா், மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி தப்ரேஸ் அஹமத் உடனிருந்தனா்.