வெளிமாநில மது பாக்கெட் விற்பனை: இளைஞா் கைது

திருப்பத்தூரில் வெளி மாநில மது பாக்கெட்டுகளை விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருப்பத்தூா் பேருந்து நிலையத்தின் அருகே சந்தேகத்தில் பேரில், அங்கு நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா் திருப்பத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த அலெக்ஸ் (27)என்பதும், இவா் வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அலெக்ஸை கைது செய்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மது பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com