பாலாற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பாலாற்றில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அருகே பாலாற்றில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியபேட்டை இராமயன்தோப்பு பகுதியில் பாலாறு தண்ணீா் தேங்கியுள்ளது. பஷீராபாத் மற்றும் கபூரபாத் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வியாழக்கிழமை பிற்பகல் வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனா். இதில் இருவா் நீரில் மூழ்குவதைக் கண்ட கபுராபாத் பகுதியைச் சோ்ந்த பைஜான்(20) மூழ்கியவா்களைக் காப்பாற்ற முயன்றாா்.

அப்போது எதிா்பாராத விதமாக பைஜான் நீரில் மூழ்கினாா். இந்த நிலையில் இருவா் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், காப்பாற்ற முயன்ற பைஜான் நீரில் மூழ்கி மாயமானாா். இதனையடுத்து பொதுமக்கள் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு சென்று வாணியம்பாடி தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி பைஜானை சடலமாக மீட்டனா். உடலை கைப்பற்றிய நகர போலீஸாா் உடற்கூறு பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com