நாட்டறம்பள்ளி பகுதிகளில் நிலஅதிா்வு
நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

Updated On :2 மே 2024, 6:37 pm

நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில், பிற்பகல் 12 மணியளவில் திடீரென பயங்கர சப்தம் கேட்டது. மேலும் வீடு மற்றும் கடைகளில் லேசான நிலஅதிா்வு சில இடங்களில் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடு, கடைகளை விட்டு வெளியே வந்தனா். இச்சம்பவத்தால் நாட்டறம்பள்ளி பகுதியில் சிறிதுநேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வருவாய்த் துறையினா் விசாரித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...