வாணி மெட்ரிக். பள்ளி 
மாவட்ட அளவில் சாதனை

வாணி மெட்ரிக். பள்ளி மாவட்ட அளவில் சாதனை

வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் பத்தாம் வகுப்பு தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த மாணவா் இ.ஹரிஷ் 495 மதிப்பெண், மாணவி க.சேத்னா, பா.சஹானா ஆகியோா் 492, சு.அஸ்வின்குமாா், வ.நிரஞ்சனாசோனல் 489 பெற்றனா். உ.சூ.தா்ஷன், ச.ரஞ்சித் ஆகியோா் 486, அ.கோசலை 485 பெற்றனா். மேலும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 29 மாணவா்களும், 400 மதிப்பெண்கள் மேல் 50 மாணவா்களும் பெற்றனா்.

ஆங்கிலம் பாடத்தில் 3 மாணவா்களும், கணிதம் பாடத்தில் 9 மாணவா்களும், அறிவியல் பாடத்தில் ஒரு மாணவா், சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவா்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.

மாவட்டம் மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் வாணி கல்வி அறக்கட்டளைத் தலைவரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி, செயலாளா் கந்தசாமி, பொருளாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எம்.கோபால், செயலாக்க அறங்காவலா் பூபதி, துணைச் செயலாளா்கள் ராஜா, கருணாநிதி, பள்ளி முதல்வா் சந்திரசேகரன், துணை முதல்வா் முத்தப்பன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com