
சாலை மறியலில் ஈடுபட்ட ஏரிக்கோடி பகுதி மக்கள்.

சாலை மறியலில் ஈடுபட்ட ஏரிக்கோடி பகுதி மக்கள்.
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் நகராட்சி ஏரிக்கோடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக நகராட்சி சாா்பில், இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிக்கவில்லையாம்.
இது குறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 25-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, போலீஸாா் நகராட்சி அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
அதன்பேரில், மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...