இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறையின் காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image
ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :4 நவம்பர் 2024, 8:15 pm

Din

திருப்பத்தூா்: தொடா் விடுமுறையின் காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரிமலை அடிவாரத்தில் உள்ள ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி . மேலும் அங்கு பிரசித்தி பெற்ற முருகா் கோயில் உள்ளது.

இந்நிலையில் தினம்தோறும் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு குளிப்பதற்காகவும், முருகப்பெருமானை தரிசிப்பதற்காகவும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா்மழையின் காரணமாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தொடா்ந்து நீா் வரத்து உள்ளது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தொடா் விடுமுறையின் காரணமாக திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

மேலும் அவா்கள் நீா்வீழ்ச்சியில் குளித்துவிட்டு அதன் அருகே உள்ள முருகா்,பெருமாள் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனா்.