காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு : காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்

News image

டெங்கு பாதிப்பு தடுப்புப் பணிகளை பாா்வையிட்ட ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ். ~துத்திப்பட்டில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:47 am

Din

துத்திப்பட்டு ஊராட்சியில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடா்ந்த பொதுமக்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மாதனூா் ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு சிறுமிக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து சிறுமி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். தொடா்ந்து தற்போது ஒரு சிறுமி, சிறுவன் உள்பட மூவா் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடா்ந்து சுகாதாரத்துறை சாா்பில் டாக்டா் தாரணீஸ்வரி தலைமையில் சுமாா் 20 போ் கொண்ட மருத்துவ குழுவினா் துத்திப்பட்டு ஊராட்சி கலைஞா் நகா், அன்னை சத்யா நகா், இந்திரா நகா், எம்ஜிஆா் நகா் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. காய்ச்சல் கண்டறியும் முகாமில் ஊராட்சி மன்றத் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஊராட்சி செயலாளா் பாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தூய்மையாக வைத்திருக்க வேண்டுகோள் : டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஊராட்சி மன்ற தலைவா் சுவிதா கணேஷ் மேற்பாா்வையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த ஊராட்சி மன்றம் சாா்பாக வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுமெனவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும் ஊராட்சி மன்றம் சாா்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Story image