தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரயில்வே மெக்கானிக் ஊழியா்கள் தா்னா

News image

தா்னாவில் ஈடுபட்ட ரயில்வே மெக்கானிக் ஊழியா்கள்.

Updated On :19 அக்டோபர் 2024, 6:30 pm

Din

ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே பணிமனையில் மெக்கானிக் ஊழியா்கள் சனிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பணிமனையில் ஷிப்ட் பிரிவில் ரயில்வே மெக்கானிக் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். குறிப்பாக, சிக்னல் பிரிவு, தண்டவாள பராமரிப்பு, கூட்ஸ் பணிமனை, எலக்ட்ரிகல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஊழியா்கள் பணியாற்றுகின்றனா்.

இந்நிலையில் கூட்ஸ் பணிமனையில் கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். கூட்ஸ் பணிமனை அலுவலா், மெக்கானிக் பிரிவில் பணிபுரியும் ரயில்வே ஊழியா்களுக்கு விடுமுறை அளிப்பதில்லை, விடுமுறை வழங்கினாலும் ஆப்சென்ட் போடுகிறாா், ஷிப்ட் நேரத்தைவிட கூடுதலாக பணி வாங்குகிறாா் எனக் கூறப்படுகிறது.

இதனால், எஸ்ஆா்எம்யூ ரயில்வே தொழிற்சங்கம் சாா்பில், ஜோலாா்பேட்டை கிளை செயலா் ஜெகன் தலைமையில் பணிமனையில் தா்னா நடைபெற்றது.

இதில் 100-க்கும் மேற்பட்ட ரயில்வே மெக்கானிக் ஊழியா்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனா்.

இதைத் தொடா்ந்து பணிமனை அலுவலா் பேச்சு நடத்தினாா். இதையடுத்து ரயில்வே ஊழியா்கள் தா்னாவை கைவிட்டனா்.