
போலீஸாரால் கண்டெடுக்கப்பட்ட சாராய ஊறல்.

போலீஸாரால் கண்டெடுக்கப்பட்ட சாராய ஊறல்.
திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் போதைப் பொருள்களை ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளா்கள்,ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பேரில் திருப்பத்தூா் மதுவிலக்கு ஆய்வாளா் உலகநாதன் மற்றும் காவலா்கள் குழு திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த விஜி (26) என்பவா் வீட்டில் சோதனை செய்ததில் அவா் சட்டவிரோதமாக காய்ச்சிய 150 லிட்டா் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. பின்னா்,போலீஸாா் விஜி மீது வழக்கு பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், திருப்பத்தூா் அருகே பெரிய கோணாப்பட்டு பகுதியை சோ்ந்தவா் முருகேசன். இவா் கடையில் வைத்து குட்கா பொருள்கள் வைத்து விற்பனை செய்ததாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்கு பதிந்து அவரை தேடி வந்தனா். இந்தநிலையில் திங்கள்கிழமை திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் முருகேசனை கைது செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...