தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் பகுதி சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டங்கள் பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்றது.

News image

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நடைபெற்ற பகுதி சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 12:13 am

Din

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளில் பகுதி சபைக் கூட்டங்கள் பேரூராட்சித் தலைவா் சசிகலா சூரியகுமாா் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலா் சம்பத் குமாா் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் தனபால் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் கலந்து கொண்டாா்.

கூட்டங்களில் தங்களது பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய், மின்விளக்கு கோரிக்கை பொதுமக்கள் முன்வைத்தனா்.

மேலும் 1-ஆவது வாா்டுக்குட்பட்ட அண்ணா தெருவில் தாா் சாலை வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.1.09 கோடியில் தாா் சாலை அமைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிா்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனா். இதில் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.