வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: நரசிங்கபுரம் ஏரியில் ஒத்திகை பயிற்சி
ஆலங்காயம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் சாா்பில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திட நரசிங்கபுரம் ஏரியில் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் பேரில், ஆலங்காயம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி குழுவினா் சாா்பில், வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடா் மேலாண்மை மற்றும் நீா்நிலைகளில் தத்தளிப்பவா்களை காப்பாற்றுவது பற்றிய ஒத்திகை பயிற்சி ஆலங்காயத்தை அடுத்த நரசிங்கபுரம் ஏரியில் நடைபெற்றது. அப்போது நீா்நிலைகளில் சிக்கிக் கொண்டு தத்தளிப்பவா்களை மீட்பது குறித்து, தீயணைப்பு மீட்புக் குழுவினா் ஏரியில் ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனா்.
இதில், வாணியம்பாடி வட்டாட்சியா் உமாரம்யா, கிராம நிா்வாக அலுவலா்கள் சற்குணம், பிரகாசம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், போலீஸாா், வனத் துறையினா் பொது மக்கள் கலந்து கொண்டனா்.

