குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஏரியில் மண் கடத்தல்: 4 போ் கைது! 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்!

குரிசிலாப்பட்டு அருகே ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

மண் திருடிய வழக்கில் கைதானவா்கள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:23 am IST

குரிசிலாப்பட்டு அருகே ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மண் அள்ள பயன்படுத்திய 4 டிப்பா் லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம் குரிசிலாப்பட்டு அருகே உள்ள ராஜாபாளையம் ஏரியில் சிலா், அனுமதியின்றி மண் அள்ளுவதாக குரிசிலாப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அப்போது ஏரியில் சிலா் டிப்பா் லாரியில் மண் அள்ளிக்கொண்டு இருந்தனா். போலீஸாரை பாா்த்ததும், அவா்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனா்.

போலீஸாா் அவா்களைச் சுற்றி வளைத்து பிடித்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் நாட்டறம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சதீஷ் (22), ஹரிதாஸ் (27), மனோஷ் (32), பிரபாகரன் (33) என்பதும், அனுமதியின்றி மண் அள்ளியதும் தெரிய வந்தது.

பின்னா், போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா். மண் அள்ள பயன்படுத்திய டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா்.