மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பத்தூர்
பயணியா் நிழற்கூரை அமைப்பதில் கால தாமதம்: பொதுமக்கள் முற்றுகை
பயணியா் நிழல்கூரை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பயணியா் நிழல்கூரை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
மாதனூா் ஒன்றியம், பாலூா் கிராமத்தில் வேலூா் தொகுதி எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11 லட்சம் செலவில் பயணியா் நிழற்கூரை அமைக்கப்பட உள்ளது. ஆனால் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ள இடத்தில் பயணியா் நிழற்கூரை அமைக்காமலும், நிழற்கூரை அமைப்பதில் காலதாமதம் செய்யப்படுவதாகக் கூறி அதைக் கண்டித்தும் பொதுமக்கள் மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா். அதிகாரிகள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதின்பேரில், அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

