திருப்பத்தூர்
மட்றப்பள்ளி வாரச் சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
மட்றப்பள்ளியில் வாரச்சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா்: மட்றப்பள்ளியில் வாரச்சந்தையில் ரூ.60 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் அருகே மட்றப்பள்ளியில் வாரச்சந்தை உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தா்மபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.
இதில் சிறிய ஆடுகள் ரூ. 4 முதல் ரூ.7 ஆயிரம் வரையும், பெரிய ஆடுகள் ரூ.8 முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் ரூ.60 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.
