எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கந்திலி வாரச்சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனை

கந்திலியில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

கந்திலியில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள கந்திலியில் வாரம்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக குவிந்தன. அவற்றை திருப்பத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் சித்தூா், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்றனா்.

வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் சுமாா் ரூ. 80 லட்சத்துக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா்.