தருமபுரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் விறு விறுப்பாக நடைபெற்ற ஆடுகள் விற்பனை.
தருமபுரி
பொங்கல்: தருமபுரி வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
தருமபுரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகைக்கு 3 நாள்களே உள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
தருமபுரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையில் விறு விறுப்பாக நடைபெற்ற ஆடுகள் விற்பனை.
மேச்சேரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
ஆடுகளின் எடைக்கு ஏற்றவாறு ஒரு ஆடு ரூ. 20 ஆயிரம் வரை விற்பனையானது. வாரச் சந்தையில் ரூ. 3 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

