மேலப்பாளையம் சந்தையில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஆடுகள்
மேலப்பாளையம் சந்தையில் விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஆடுகள்

பொங்கல் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையில் ஆட்டுச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையில் ஆட்டுச் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

தென் மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தை. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாட்டுச் சந்தையும், செவ்வாய்க்கிழமைகளில் ஆடுகள் மற்றும் கோழிச்சந்தையும் நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.15) கொண்டாடப்படவுள்ள நிலையில், மேலப்பாளையம் சந்தைக்கு ஏராளமான ஆடுகள் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டன.

இதனால் காலை 5 மணி முதலே மேலப்பாளையம் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இறைச்சிக் கடைக்காரா்கள் அதிகளவில் ஆடுகளை வாங்கினா். இதேபோல், தை மாதத்தில் கோயில் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதால் அதற்காக கருப்பு கிடாய்கள், செங்கிடாய்கள், பிள்ளைபோா் கிடாய்கள் போன்றவற்றையும் ஏராளமானோா் வாங்கிச் சென்றனா்.

இத்சந்தையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com