பொங்கல் பண்டிகை: நெல்லையில் 600 போலீஸாா் பாதுகாப்பு

திருநெல்வேலி மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Published on

திருநெல்வேலி மாநகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து மாநகர காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், மாநகர காவல் ஆணையா் என்.மணிவண்ணன் உத்தரவுப்படி, காவல்துறையினரால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோயில்கள், முக்கிய வீதிகள், பொழுதுபோக்கு இடங்கள், பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாநகரின் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸாருடன் கூடிய ரோந்து பைக்குகள், நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், பிங்க் ரோந்து வாகனங்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது.

பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் மது போதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவா்கள் மீதும், சாலை விதிகளை மீறுபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாநகரில் உள்ள 7 சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com