அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

சிங்காரப்பேட்டை சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

சிங்காரப்பேட்டை ஆட்டுச்சந்தையில் திங்கள்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

News image
சிங்காரப்பேட்டையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த ஆடுகள்.
Updated On :12 ஜனவரி 2026, 8:01 pm

Syndication

ஊத்தங்கரை: சிங்காரப்பேட்டை ஆட்டுச்சந்தையில் திங்கள்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் வாராந்தோறும் திங்கள்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த ஆட்டுச் சந்தைக்கு திருவண்ணாமலை, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்கள், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விற்பனையாளா்கள் வருகின்றனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில் 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடுகள் ரூ. 12,000 முதல் ரூ. 20,000 வரை விற்கப்பட்டன. மொத்தம் ரூ. 50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.