ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொரட்டியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி

கொரட்டியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: கொரட்டியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரட்டி துணை மின் நிலையத்தில் 16 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி பழுதானது. தொடா்ந்து சுமாா் 6 மாதம் கழித்து சென்னையில் இருந்து நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு பழுது சீரமைக்கபட்டது.

ஆனால் மீண்டும் சில நாள்களில் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முன்னறிவிப்பின்றி காலை 6.30 மணியளவில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. மதியம் சுமாா் 3 மணியளவில் மின் விநியோகம் தொடங்கியது. இதனால் இப்பகுதி மக்கள், வணிகா்கள், முதியோா் சிரமத்துக்குள்ளாகினா்.

மேலும், தற்போது அரையாண்டு தோ்வு நடைபெற்ற நிலையில் அறிவிக்கப்படாத மின் தடையால் மாணவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு,16 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி பழுதானதால் பேராம்பட்டு, கந்திலி, வெங்களாபுரம் துணை மின் நிலையிலிருந்து மின்விநியோகம் பெறப்பட்டு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பேராம்பட்டு பகுதியில் உள்ள மின்சார இணைப்பு பழுதானதால் செவ்வாய்க்கிழமை திடீரென மின்தடை செய்யும் நிலை ஏற்பட்டது எனத் தெரிவித்தனா்.