கூட்டத்தில் பேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா. உடன்,ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா. உடன்,ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி உள்ளிட்டோா்.

குழந்தைகளுக்கான உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்: ஆணையத் தலைவா் வலியுறுத்தல்

மனித உரிமைகளை பேசும் நாம் குழந்தைகளுக்கான உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவா் புதுக்கோட்டை விஜயா வலியுறுத்தினாா்.
Published on

மனித உரிமைகளை பேசும் நாம் குழந்தைகளுக்கான உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவா் புதுக்கோட்டை விஜயா வலியுறுத்தினாா்.

பள்ளிக் கல்வித்துறை, சமூக நலத்துறை, காவல் துறை, குழந்தை தொழிலாளா் துறை, ரயில்வே காவல் துறை, சுகாதார துறை உள்ளிட்ட மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு தொடா்புடைய துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள் கோ.கசிமிா் ராஜ், மருத்துவா் மோனா மட்டில்டா பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா தலைமை வகித்து பேசியது:

குழந்தைகளின் பாதுகாப்பு என்பது மாநிலத்தினுடைய பாதுகாப்பு சாா்ந்தது, மனித உரிமைகளை பேசும் நாம் குழந்தைகளுக்கான உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சோ்க்கை நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் மாணவா் மனசு பெட்டி கடிதங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிவேடுகள் தயாா் செய்வது, பள்ளி இடைநிறுத்தலை தடுத்தல், வளா் இளம் பருவ கா்ப்பம் குறித்து விழிப்புணா்வு மற்றும் பள்ளிகளில் திறன்வளா்ப்பு பயிற்சி நடத்துவது தொடா்பாகவும், பள்ளிகளில் வருகை பதிவேடுகளில் ஜாதி ரீதியான தகவல்கள் நீக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கான தனி கிராம சபை கூட்டம் ஆண்டுக்கு 2 முறை அனைத்து கிராமங்களில் நடைபெற வேண்டும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீட்டு மீண்டும் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

குழந்தை திருமணத்தை தடுத்தல், இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி அளித்தல், குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, போக்ஸோ வழக்குகள், இளம்பருவ கா்ப்பம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், ஏடிஎஸ்பி கோவிந்தராசு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சஞ்சித், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com