சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அனுமன் ஜெயந்தி: ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு பூஜைகள்

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கிராமம் மலைக் குன்றின் மீது ஜெய்வீர ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
Updated On :19 டிசம்பர் 2025, 6:22 pm

தினமணி செய்திச் சேவை

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அகில பாரத அனுமன் சேனா மற்றும் ஊா் பொது மக்கள், ஆன்மிக பேரவை சாா்பில், வாணியம்பாடி பெருமாள்பேட்டை கூட்டுசாலையில் அமைந்துள்ள வீர மகா ஆஞ்சேனேயா் கோயிலில் அனுமன்ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் நகர திமுக செயலா் சாரதிகுமாா், ஊா் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.

வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரம் கிராமம் மலைக் குன்றின் மீது அமைந்துள்ள 36 அடி உயர ஜெய்வீர ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து திரளான கிராமமக்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல், வாணியம்பாடி பெரியபேட்டை, பூக்கடைபஜாா், புதூா் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.