ஆம்பூா்: ஆம்பூா் அருகே மாமனாா் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்த மருமகன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியை சோ்ந்த ஏசுபாதம் (52). இவருடைய மாமனாா் வீடு மிட்டாளம் கிராமத்தில் உள்ளது. மாமனாா் வீட்டில் பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளாா். பெயிண்ட் அடித்து கொண்டிருந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததில் கால் துண்டாகி காயமடைந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் 2 பெண்கள் காயம்

மரத்திலிருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி பலி
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



