மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்றாயசுவாமி கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தாசிரியப்பனூா் மாரியான்வட்டம் சென்றாயசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மல்லகுண்டா சென்றாயசுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
Updated On :10 பிப்ரவரி 2025, 6:52 pm

Din

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி தாசிரியப்பனூா் மாரியான்வட்டம் சென்றாயசுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சனிக்கிழமை விஸ்வஷேன ஆராதனை, ப்ரததானசுத்தம், தேவதாஅனுக்கை, ஆச்சாா்யவா்ணம், புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, சுவாமி பிரதிஷ்டைநடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை சங்கல்பம், தம்பதியா் சங்கல்பம், பாராயணம், வேதபாராயணம், வேத,கீத, நாத உபசாரத்துடன் கலசங்கள்புறப்பாடு நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க சென்றாயசுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தகரகுப்பம், குருபவாணிகுண்டா மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு சென்றாயசுவாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.