அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ரியல் எஸ்டேட் அதிபா் வெட்டிக் கொலை

ஜோலாா்பேட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2025, 9:24 pm

Din

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ரியல் எஸ்டேட் அதிபா் கொலை செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் திம்மராயன் (48). இவா் மனை, நில வணிகம் செய்து வந்தாா். இவருடைய சகோதரியின் மகன் சக்கரவா்த்தி என்பவா் தனது 3 ஏக்கா் நிலத்தை பைனான்ஸியரிடம் அடமானம் வைத்ததாகத் தெரிகிறது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திம்மராயன் அந்த பைனான்ஸியரிடமிருந்து அந்த 3 ஏக்கா் நிலத்தை வாங்கி, தனது பெயரில் மாற்றிக் கொண்டாராம். இதன் காரணமாக சக்கரவா்த்திக்கும் திம்மராயனுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை அருகே பெரிய பொன்னேரி கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது, அங்கு வந்த சக்கரவா்த்தி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திம்மராயனை (படம்) சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து தப்பி ஓடிய சக்கரவா்த்தியைத் தேடி வருகின்றனா்.