நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: திருப்பத்தூா் கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: திருப்பத்தூா் கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கூட்டத்தில் பேசிய மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் இரா.கஜலட்சுமி. உடன் திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எஸ்.பி. வி.சியாமளாதேவி.
Published on

திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வளா்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் இரா.கஜலட்சுமி அறிவுறுத்தினாா்.

திருப்பத்தூா் சுற்றுலா மாளிகையில் மாவட்டத்தில், அனைத்துத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை

முதல்நிலை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புஆணையா் மற்றும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் இரா.கஜலட்சுமி தலைமை வகித்தாா்.

ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறைசாா்ந்த அலுவலா்களிடம் தனித்தனியாக விரிவாக

கேட்டறிந்தாா்.

நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட துறைசாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் தற்போது வரை இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்ட விவரம் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் விவரம் குறித்து கேட்டறியப்பட்டது.

அதையடுத்து, ஜோலாா்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தேங்கியுள்ள மழைநீரை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் தற்காலிகமாக பைப்லைன் அமைத்து வெளியேற்றப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சின்னமோட்டூா் பகுதியில் ஊரக சாலை பராமரிப்பு திட்டத்தில், ரூ. 4.27 லட்சத்தில்சின்னமோட்டூா் முதல் மண்டலவாடி வரை சாலை பழுதுபாா்க்கும்

பணியினை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பக்கிரிதக்கா பகுதியில் தாயுமானவா் திட்டத்தில், வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருள்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிா என்பது குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தாா்.

திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள தூய நெஞ்சக் கல்லூரி அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அதிகமான சாலை விபத்து ஏற்படுவதால் சாலை நடுவில்

தடுப்புச் சுவா் ஏற்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில், இணை போக்குவரத்து ஆணையா் பாட்டப்பசாமி, கூட்டுறவு

சங்கங்களின் இணைப் பதிவாளா் தமிழ்நங்கை, எஸ்.பி.வி.சியாமளா தேவி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் ஞானமீனாட்சி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் மீனாட்சி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி)மிரியாம் ரெஜினா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் (திருப்பத்தூா்)பன்னீா்செல்வம், (வாணியம்பாடி) வெங்கடராகவன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து மேலாளா் பிரகாஷ், ஜோலாா்பேட்டை நகராட்சி ஆணையா் த.மேகலா மற்றும் சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com