வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான மாதகடப்பா மலைப் பகுதி மக்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஏடிஎஸ்பி கோவிந்தராசு.
வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான மாதகடப்பா மலைப் பகுதி மக்களிடம் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திய ஏடிஎஸ்பி கோவிந்தராசு.

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மலைப் பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு

வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மதுவிலக்கு சோதனை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
Published on

வாணியம்பாடி: திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி கோவிந்தராசு தலைமையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் மதுவிலக்கு சோதனை ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான தேவராஜபுரம், மாத கடப்பா மலைப் பகுதிகளில் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த அடுப்புகள் உள்பட பொருள்கள் கண்டறிந்து அழிக்கப்பட்டது. பிறகு மலைப் பகுதி மக்களை ஏடிஎஸ்பி கோவிந்தராசு சந்தித்துப் பேசினாா். அப்போது புதிதாக யாராவது நடமாடுவது கண்டறியப்பட்டால், உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com