சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிரதமா் மோடியின் திருச்சி வருகைக்குப்பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பாஜக

பிரதமா் மோடி திருச்சி வருகைக்கு பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்.

News image
பிரதமா் மோடி- கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 12:31 am

Syndication

பிரதமா் நரேந்திரமோடி திருச்சி வருகைக்கு பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றாா் பாஜக மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்.

திருச்சியில் மாா்ச் 11-ஆம்தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கரூா் மாவட்ட பாஜகவினா் பங்கேற்பது குறித்து கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கரூா் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், துணைத்தலைவா் சக்திவேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்.

செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், துணைத்தலைவா் கே.பி.ராமலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தொடா்ந்து, கருப்பு முருகானந்தம் செய்தியாளா்களிடம் கூறியது: திருச்சி பஞ்சப்பூா் அருகே மாா்ச் 11-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். இந்த கூட்டத்துக்கு பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.