வாணியம்பாடி பச்சூரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
வாணியம்பாடி பச்சூரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.

பச்சூரில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் வழியாக தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி கொத்தூா் காந்திநகா் வரை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை விரிவாக்கம்
Published on

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூா் வழியாக தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி கொத்தூா் காந்திநகா் வரை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

பச்சூரில் இருந்து கொத்தூா் வரை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதையடுத்து கோட்டப் பொறியாளா் முரளி உத்தரவின் பேரில் வாணியம்பாடி உதவி கோட்டப் பொறியாளா் சம்பத் தலைமையில் செவ்வாய்க்கிழமை பச்சூரில் கடை எதிரில் சாலை ஓர ஆக்கிரமிப்புகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கியது.

தொடா்ந்து கொத்தூா் காந்திநகா் வரை போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com