திருப்பத்தூா்: நாளை உழவரை தேடி முகாம்கள்

உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை எனும் திட்டத்தின்கீழ், வெள்ளிக்கிழமை (நவ. 28) முகாம்கள் நடைபெற உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Published on

திருப்பத்தூா்: உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத் துறை எனும் திட்டத்தின்கீழ், வெள்ளிக்கிழமை (நவ. 28) முகாம்கள் நடைபெற உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்த செய்திக் குறிப்பு:

உழவரை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்னும் திட்டத்தில் வேளாண்மை உழவா் நலத்துறையின்கீழ் இயங்கி வரும் அனைத்துத் துறைகளின் வட்டார அலுவலா்கள், சாா்பு துறைகளான கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோா் உழவா்களை அவா்களது வருவாய் கிராமங்களில் வசித்து விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க உள்ளனா்.

முகாம் வெள்ளிக்கிழமை (நவ. 28) ஆலங்காயம் வட்டாரத்தில் நரசிங்கபுரம், ஆம்மூா்பேட்டை, ஜோலாா்பேட்டை வட்டாரத்தில் கலந்திரா, தாமலேரிமுத்தூா், கந்திலி வட்டாரத்தில் சின்னராம்பட்டி, குரும்பேரி, மாதனூா் வட்டாரத்தில் மின்னூா், செங்கிலிகுப்பம், நாட்டறம்பள்ளி வட்டாரத்தில் சிக்கனாங்குப்பம், கவுக்காப்பட்டு, கொடுகமணிப்பட்டறை, தும்பேரி ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம்.

X
Dinamani
www.dinamani.com