விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

பாலின சமத்துவ விழிப்புணா்வு பேரணி

திருப்பத்தூரில் பாலின சமத்துவ விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
Published on

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பாலின சமத்துவ விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சார பேரணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக திருப்பத்தூரில் உள்ள தனியாா் கல்லூரி வரை பேரணி சென்றது.

பேரணியில் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு, சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் பாலின வன்முறைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் விஜயகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்(ம)குடும்பநலம் துணை இயக்குநா் மணிமேகலை, மாவட்ட சுகாதார அலுவலா் வினோத்குமாா்,உதவி திட்ட அலுவலா் திருமேணி, அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com