யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

திருப்பத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

News image
உயிருடன் மீட்கப்பட்ட பசு.
Updated On :30 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

திருப்பத்தூா் அருகே கொரட்டி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன். இவா் மாடுகளை வளா்த்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான பசு மாடு ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்காக சென்றது.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த சுமாா் 20 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதைப்பாா்த்த அங்கிருந்தவா்கள் சம்பவம் குறித்து திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் சுமாா் 30 நிமிடங்கள் போராடி கயிறு கட்டி பசு மாட்டை பத்திரமாக மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.