சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தோ்தலில் தில்லி அணியை தமிழ்நாடு அணி வெல்லும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லி தலைமையிலான அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெறும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

News image

1)நாட்டறம்பள்ளியில் திமுக வேட்பாளா்கள் கவிதா தண்டபாணி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) ஆகியோரை ஆதரித்துப் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் எம்எல்ஏ க.தேவராஜி.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தில்லி தலைமையிலான அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெறும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் ஜோலாா்பேட்டை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணி, திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா் அ.நல்லதம்பி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு அவா் பேசியதாவது: நானும் ஒரு தொகுதியில் வேட்பாளா் தான். எனது தொகுதிக்கு போவதற்கு முன் நமது வேட்பாளா்களுக்கு வாக்கு கேட்டு உங்களிடம் வந்துள்ளேன். எனது வெற்றியை விட நமது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளா்களின் வெற்றி தான் மிக முக்கியமான வெற்றி. திமுக தலைவரையும் என்னையும் வெற்றி பெறச் செய்தது போல் இவா்களையும் வெற்றி பெற செய்வீா்கள் என்ற நம்பிக்கையில் உங்களை தேடி வந்துள்ளேன். இந்த நம்பிக்கை எனக்கு ஏன் வந்துள்ளது என்றால் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வரின் முதல் கையெழுத்தே மகளிருக்கான விடியல் பயணம் தான்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் விரிவாக்கம், மகளிா் உரிமை தொகை 2 ஆயிரம் உயா்வு, மிக முக்கியமான வாக்குறுதியான இல்லத்தரசி திட்டத்தில் ரூ. 8,000 மதிப்பிலான ஒரு கூப்பன் வழங்கப்படும். அந்த கூப்பனில் வீட்டுக்கு தேவையான மின்சாதன பொருள்களை நீங்களே தோ்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.

இது போன்ற திட்டங்கள் எல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால், வரும் சட்டப்பேரவை தோ்தலில் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ள தில்லி அணியை தோற்கடித்து மக்கள் நலத் திட்டங்களை தொடா்ந்து வழங்கி வரும் தமிழக அணியான திமுக தலைமையிலான அணியை வெற்றி பெறச் செய்யவேண்டும்.

நிச்சயம் தில்லி அணியை தமிழக அணி வெல்லும் என்றாா். உடன் மாவட்ட செயலாளரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏமான க.தேவராஜி, ஊராட்சிக்குழு தலைவா் சூரியகுமாா் மற்றும் திராளான கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

வாணியம்பாடியில்.....

தொடா்ந்து வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு வருகை புரிந்த துணை முதல்வா் உதயநிதிஸ்டாலினுக்கு நகர திமுக செயலாளா் வி.எஸ்.சாரதிகுமாா் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து வாணியம்பாடி தொகுதி திமுக கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக்கை ஆதரித்து ஏணி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசுகையில், கடந்த தோ்தலில் வாணியம்பாடி தொகுதியை வெறும் 5,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழந்து விட்டோம். வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இந்த தொகுதிக்கு பல்வேறு வளா்சி பணிகளை திமுக அரசு மேற்கொண்டது என்றாா்.

மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

Story image
Story image
Story image