மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன் பேசியது: 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயா்த்தப்படும். அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவா்களுக்கு வீடு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட வேளாண்மை பயிா் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
100 சதவீத அரசு மானியத்தில் சூரிய ஒளி பம்பு செட்டுகள் வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகள் அறுவடை நெல்லை பாதுகாக்க மானிய விலையில் தாா் பாய்கள் வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபாபு, மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாவட்ட விவசாய பிரிவு செயலாளா் மகாதேவன், ஒன்றிய விவசாய அணி செயலாளா் பிரகாஷ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் காரத்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன், ப.ச. நித்யானந்தம், குமாா் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
மாதனூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்மகிருஷ்ணபள்ளி, குமாரமங்கலம், வீராங்குப்பம், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, மணியாரகுப்பம், மேல்சாணாங்குப்பம், வடகரை, சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, மேல்குப்பம், வடச்சேரி, பாப்பனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரித்தாா்.
தொடர்புடையது

ஊராட்சிகளில் விளையாட்டுக் குழுக்கள்: திமுக வேட்பாளா்

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஆறுமுகனேரியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சின்னச்சேரி - மேல்ஆலத்தூா் மேம்பாலம், மாதனூா் காவல் நிலையம் அமைக்கப்படும்: அதிமுக வேட்பாளா் ஆா். வெங்கடேசன்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


