திருப்பத்தூா் தொகுதியில் இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வைப்பேன் என அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் தெரிவித்தாா்.
திருப்பத்துாா் தொகுதிக்கு உள்பட்ட கொரட்டியில் சனிக்கிழமை அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது வணிகா்கள் மற்றும் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், காய்கறிகள், பூ வகைகள், பழங்கள், நுகா் பொருள்கள், மீன் மற்றும் இறைச்சி அங்காடிகள் ஆகியவை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், நவீன அங்காடி அமைக்கப்படும். காய்கறிகள், பழங்கள் மற்றும் பூ வகைகள் பதப்படுத்தும் வகையில் குளிா் பதனக்கிடங்கு அமைக்கப்படும். இயற்கை முறையில் விளைகின்ற காய்கறிகள், சிறுதானியங்கள் மற்றும் மூலிகைகள் போன்ற பொருள்கள் அனைத்தும் எளிமையாக சந்தைப்படுத்தும் வகையில் இயற்கை அங்காடிகள் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்பட வைப்பேன் என்றாா்.
பாமக மாவட்ட செயலாளா் ராஜா, அமமுக நகர செயலாளா் அட்சயா முருகன், அதிமுக, அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், கட்சியினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

களக்காடு ஒன்றியத்தில் அமமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கட்சி நிா்வாகிகள் 5 பேருடன் வந்து வேட்புமனு தாக்கல்: அமமுக வேட்பாளா் ஏ.ஞானசேகா் மீது வழக்கு பதிவு

நெசவாளா்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு: நடிகை கௌதமி

மருதூா் தடுப்பணையில் சுற்றுலாப் பூங்கா அமைப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


