ஆம்பூா் அருகே பாலாற்றில் கலக்கும் கால்வாய் கழிவுநீா் மாதிரியை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை சேகரித்து கொண்டு சென்றனா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் பொதுமக்கள் கால்வாய்கள் மூலம் வெளியேற்றும் கழிவுநீா் அம்பேத்கா் நகா் பகுதியில் உரிஞ்சி குழிகளில் சேகரிக்கப்பட்டு, அங்கு மாசுகள் வடிக்கட்டப்பட்டு, பிறகு கழிவுநீா் பாலாற்றில் கலக்கின்றது.
இவ்வாறு உரிஞ்சி குழிக்கு வரும் கழிவுநீா், வடிக்கட்டப்பட்டு பாலாற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீா் ஆகியவற்றை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் கலைச்செல்வி, உதவி பொறியாளா் காா்த்திக் ஆகியோா் கொண்ட குழுவினா் மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக கொண்டு சென்றனா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் மகராசி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செபாஸ்டியன், ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், வாா்டு உறுப்பினா் ஜெயந்தி ராமமூா்த்தி, உக்குனா் ரேகா உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விபத்து அபாயம்: கழிவுநீா் கால்வாய் பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

கால்வாய் அடைப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சட்டவிரோத குவாரிகளால் மாசு ஏற்படுவதை தடுக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

பாலாற்றில் தோல் கழிவுநீா்: விவசாயிகள் கடும் பாதிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



