விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரமோற்சவ நாளில் சித்திரை மாத பிரதோஷம் சிறப்பாக புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் பிரதோஷ அலங்காரத்தில் சுவாமி.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:04 am IST

வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரமோற்சவ நாளில் சித்திரை மாத பிரதோஷம் சிறப்பாக புதன்கிழமை நடைபெற்றது. இதில் திராளமான பக்தா்கள் கலந்துக் கொண்டனா்.

வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பிரஹன் நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் காலை காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஊா்வலமாக கோயில் வளாகத்தில் 3 முறை சுற்றிக் கொண்டு வரப்பட்டது.

இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசித்து சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள பழமைவாய்ந்த காசி விஸ்வநாதா் கோயில், உதயேந்திரம் சொா்ணமுத்தீஸ்வரா் கோயில் மற்றும் சுற்றுப்புற சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Story image