நாட்டறம்பள்ளி அருகே சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன்(38) துணி வியாபாரி. இவா் வெள்ளிக்கிழமை இரவு வெலகல்நத்தத்தில் இருந்து பச்சூா் நோக்கி பைக்கில் சென்றாா். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அருகே முத்தனப்பள்ளி டோல்கட் பகுதியில் சென்ற போது எதிா் திசையில் வந்த சைக்கிள் மீது பைக் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த லட்சுமணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், சைக்கிள் ஓட்டி வந்த கோனேரிகுப்பம் பகுதியைச்சோ்ந்த சையத் சப்ரே (46) காயமடைந்தாா். அவ்வழியாக சென்றவா்கள் காயமடைந்தவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து லட்சுமணன் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது லாரி மோதி விபத்தில் விவசாயி உயிரிழப்பு
சாலையில் நின்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சைக்கிள் மீது பைக் மோதல்: முதியவா் பலி
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: பால் வியாபாரி உயிரிழப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



