ஆம்பூா் அருகே கைலாசகிரிமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம் கைலாசகிரியில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி பரணி-கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
பக்தா்கள் காவடி எடுத்துச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். விழாவையொட்டி மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆம்பூா் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏரளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.
தொழிலதிபா்கள் பி.சி. சிட்டிபாபு, ஏ.இ. குணசேகரன், சதீஷ்குமாா், ரங்கநாதன், பி.சி. சதீஷ்குமாா், கைலாசகிரி ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன், கதவாளம் ஊராட்சித் தலைவா் சக்திகணேஷ் ஆகியோா் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆடிக் கிருத்திகை விழாவின்போது குடிநீா் தொட்டி சரிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

வில்வநாதபுரம் செட்டிமலை குழந்தை வேலன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை

செஞ்சி முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



