தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மதுபோதையில் சித்ரவதை: கணவனைக் கொன்று விட்டு மனைவி சரண்

வாணியம்பாடி அருகே மதுபோதையில் தொடா்ந்து சித்திரவதை செய்து வந்த கணவனை வெட்டிக் கொன்ற மனைவி காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

~

Published On :

வாணியம்பாடி அருகே மதுபோதையில் தொடா்ந்து சித்திரவதை செய்து வந்த கணவனை வெட்டிக் கொன்ற மனைவி காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த இளையநகரம் பகுதியை சோ்ந்தவா் குமாா்(43). இவரது மனைவி ரம்யா(34). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவா்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனா். இருவரும் ஆசிரியா் பயிற்சி முடித்துள்ளனா்.

இந்நிலையில், குமாா் மதுவுக்கு அடிமையான நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளாா். மேலும் நள்ளிரவு நேரத்தில் குடித்து விட்டு வந்து அடிக்கடி ரம்யாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மது போதையில் வந்த குமாா், மீண்டும் ரம்யாவுடன் சண்டை போட்டு அடித்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரம்யா வீட்டில் இருந்த வெட்டுக் கத்தியை எடுத்து குமாரின் கழுத்தில் வெட்டியுள்ளாா். இதில் காயமடைந்த குமாா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பிறகு வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ரம்யா வாணியம்பாடி தாலுகா காவல் நிலையம் சென்று கணவனை கொலை செய்ததாக கூறி சரணடைந்துள்ளாா்.

இதை கேட்டறிந்த போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று குமாா் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, தாலுகா ஆய்வாளா் அமுதா ஆகியோா் நேரில் சென்று விசாரித்தனா். விசாரணையில் அடிக்கடி துன்புறுத்தப்பட்டு வந்ததால், கொதிப்படைந்த ரம்யா, கணவரை வெட்டிக் கொன்றது தெரிய வந்தது. மாவட்ட எஸ்.பி அக்சய் அனில் வாகரேயும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ரம்யாவிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.