
மணல் கடத்தல்: 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆம்பூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பிரதிப் படம்
ஆம்பூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
மேல்சாணாங்குப்பம் வருவாய் ஆய்வாளா் ஜோதிலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
வீராங்குப்பம் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரியவந்தது. அதிகாரிகளை பாா்த்த உடன் அங்கிருந்த 4 போ் தப்பியோடி தலைமறைவானாா்கள்.
மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடி தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






